இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மேதினக்கூட்டம்

0
28

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மேதினக் கூட்டமும், பேரணியும் கினிகத்தேனை நகரில் இடம்பெற்றது. இக்கூட்டம் கினிகத்தேனை நகர பஸ் தரிப்பிடத்தில் இடம்பெற்றது.

கினிகத்தேனை விநாயகர் ஆலயத்தின் முன்றலில் ஆரம்பமான இ.தொ.காவின் மேதின பேரணியைத் தொடர்ந்து மேதினக்கூட்டம் நடைபெற்றது.

இ.தொ.கா.தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான முத்துசிவலிங்கம் மற்றும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், ஊவா மாகாண அமைச்சர்செந்தில் தொண்டமான், கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மேதினக்கூட்டம்

இந்த மே தின கூட்டத்தில் பல மாவட்டங்களிலிருந்தும் சுமார் ஐயாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments