இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் எதிர்வரும் 12ம் திகதி

0
30

இலங்கைத் தமிழரசுக் கட்சியின்இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டமானது எதிர்வரும் 2017.11.12ம் திகதி காலை 10.00 மணி தொடக்கம் வவுனியா ‘வன்னி இன்’ விடுதியில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் உட்பட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் கொழும்பு மாவட்டத்திலுள்ள கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் இக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பாகவும், மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணயங்கள் தொடர்பாகவும், அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பாகவும் மேற்படி கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com