இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 24ம் திகதிக்கு மாற்றம்

0
10

எதிர்வரும் 23ம் திகதி நடைபெறவிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டமானது எதிர்வரும் 24ம் திகதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கி. துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 24ம் திகதி காலை 10.00 மணி தொடக்கம் இல 184ஃ4, வாடி வீட்டு வீதி, கல்முனை எனும் விலாசத்தில் அமைந்துள்ள ஜெயா திருமண மண்டபத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராஜா தலைமையில் மேற்படி கூட்டத்திற்கான ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பெருந்தலைவரும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா. சம்பந்தன் மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த மத்திய செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன் போது கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பான விடயங்கள், உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பான விடயங்கள், புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான விடயங்கள், தற்கால அரசியல் நிலைமைகள் தொடர்பான விடயங்கள் போன்றன தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments