இலங்கைக்கு வான வேடிக்கை காட்டி பங்களாதேஷ் 1 1 என மூன்று தரப்புப் போட்டிகளும் சமநிலை

0
33

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ரி20 போட்டியில் பங்களாதேஷ் அணி 45 ஓட்டங்களால் நேற்று அபார வெற்றியை பதிவுசெய்து இலங்கைக்கு அதிர்ச்சியளித்திருந்தது.

நேற்றைய போட்டியில் களத்தடுப்பு, பந்துவீச்சு, துடுப்பாட்டம் என முத்துரைகளிலும் பங்களாதேஷின் அபார திறமை பங்களாதேஷ் ரசிகர்களுக்கு வான வேடிக்கையாக இருந்தது.

அத்துடன், பங்களாதேஷ் அணியின் தலைவர் மஷ்ரபி மோர்டசாவின் இறுதி ரி20 போட்டியாகவும் இந்தப் போட்டி அமைந்திருந்தது. வெற்றியுடன் பங்களாதேஷ் அணி அவரை வழியனுப்பியுள்ளமை பங்களாதேஷ் அணிக்கு புது உத்வேகம் பிறந்துள்ளது.

பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியிருந்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. ம்ருள் கைய்ஸ் 36, சர்கார் 34, சகிப் 38 என்ற அடிப்படையில் ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், மலிங்க மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, ஆரம்பம் முதலே தடுமாற்றத்தையே சந்தித்திருந்தது. சீரான இடைவேளையில் இலங்கை அணியின் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டதால், இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்தது 131 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

பங்களாதேஷ் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெற்ற டெஸ்ட் ஒருநாள் மற்றும் ரி20 என்ற அனைத்துப் போட்டிகளும், 1 1 என்ற அடிப்படையில் சமநிலைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு வான வேடிக்கை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments