இலங்கைக்கு போர்க்கப்பல் வழங்க அமெரிக்கா நடவடிக்கை

0
37

    இலங்கைக்கு போர்க்கப்பல் வழங்க அமெரிக்கா நடவடிக்கை

போர்க்கப்பல்

இலங்கைக்கு , அமெரிக்க கடலோரக் காவல்படையின் கப்பல் ஒன்று வழங்கப்படவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க- இலங்கை இந்தோ பசுபிக் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்த கப்பல் வழங்கப்படுவதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்று இதனை அறிவித்துள்ளது.

கடந்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான  உதவிச்செயலர் தோமஸ் சானோன், இலங்கைககு இரண்டாவது கப்பலை அமெரிக்கா வழங்கவுள்ளதாக கூறியிருந்தார்.

இருநாடுகளுக்கும் இடையிலான வளர்ந்து வரும் ஒத்துழைப்பின் அடையாளமாகவும், பிராந்திய உறுதிப்பாட்டில் இருநாடுகளும் கொண்டுள்ள அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையிலும், இந்தக் கப்பல் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் அறிவித்திருந்தார்.

செக்ரட்டரி வகையை சேர்ந்த இந்தக் கப்பல் இலங்கையின் கடல் எல்லை மற்றும் பொருளாதார வலயத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement