இலங்கைக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் – பிரிட்டன்.

0
51

கடந்த ஆண்டு ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுலாக்க இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்க வேண்டுமென பிரிட்டன் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய இராஜ்யத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவல்களுக்கு பொறுப்பான அமைச்சர் ஆலோக் ஷர்மா கருத்து வெளியிடுகையில்இ இலங்கை வெளிவிவகார அமைச்சர் மனித உரிமைகள் பேரவையுடன் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை கொண்டுள்ளதாக பாராட்டினார்.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வில் அமைச்சர் மட்ட கூட்டத் தொடரில் அவர் ஐக்கிய இராஜ்யத்தில் அறிக்கையை வாசித்தார். அவர் பேரவையின் அமர்வுகள் நடைபெறும் ஜெனீவா நகரில் இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பொன்றையும் நிகழ்த்தினார்.

Comments

comments