இரு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

0
110

இரு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு. நீதி அமைச்சராக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரரளவும், புத்தசாசன அமைச்சராக, வலுவான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெபேராவும் சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர்.

இவர்கள், ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று (25) சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டனர்.

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை நிறைவேற்றத் தவறிய குற்றச்சாட்டிற்காக விஜயதாஸ ராஜபக்‌ஷவை அவரின் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் விடுத்த வேண்டுகோளை ஜனாதிபதி நேற்று ஏற்றுக் கொண்டிருந்தார்.

அதன்படி ஏற்பட்ட அமைச்சுப் பதவி வெற்றிடத்திற்கு இவர்கள் இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments