இராஜனாமா குறித்து ரவி நாடாளுமன்றில் இன்று விசேட அறிவிப்பு

0
38

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று மாலை இராஜனாமா செய்யவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் அறிய முடிகிறது. இராஜனாமா குறித்த விசேட விளக்கத்தை இன்று நாடாளுமன்றில் அவர் அறிவிக்கவுள்ளார்.

பிணைமுறி மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ள ரவி கருணாநாயக்க உடனடியாக அமைச்சுப் பதவியை இராஜனாமா செய்ய வேண்டும் என்ற எதிர்ப்புகள் வலுப்பெற்று வருகின்றன.

நேற்றைய தினம் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் விசேட சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். இதன் அடிப்படையில் இன்று மாலை அவர் தனது இராஜனாமா முடிவை அறிவிக்கவுள்ளதாக அறியமுடிகிறது.

அதன் நிமித்த நாடாளுமன்றில் இன்று ஒரு மணியளவில் விசேட அறிவிப்பொன்றை ரவி கருணாநாயக்க வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com