இரண்டு லட்சம் மெட்ரிக் டொன் அரிசி இறக்குமதி

0
46

இரண்டு லட்சம்

இரண்டு லட்சம் மெட்ரிக் டொன் அரிசியை உடனடியாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், சர்வதேச ரீதியாக கேள்விப் பத்திரங்கள் இதற்காக கோரப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதீன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்தியா, பாக்கிஸ்தான், மியன்மார், கம்போடியா, வியட்நாம், தாய்லாந்து, மற்றும் பங்களாதேஸ் போன்ற நாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டரிசி 90 ஆயிரம் மெட்ரிக்டொன், சம்பா அரிசி 60 ஆயிரம் மெட்ரிக் டொன், வெள்ளை பச்சையரிசி 50 மெட்ரிக் டொன் ஆகியவற்றை இறக்குமதி செய்ய கேள்விப் பத்திரம் கோரப்பட்டுள்ளன.

இதற்கமைய முதல் தொகை அரிசி ஒரு லட்சம் மெட்ரிக் டொன் எதிர்வரும் நவம்பர் 30ம் திகதி இறக்குமதி செய்யப்படுவதுடன், எஞ்சிய ஒரு லட்சம் மெட்ரிக் டொன் அரிசி டிசம்பர் மாதம் 30ம் திகதிக்கு முன்னர் இறக்குமதி செய்யப்படவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement