இரணைமடு குளம் அபிவிருத்தி பணி முடிவடையும் தருவாயில்

0
29

இரணைமடு குளம் அபிவிருத்தி பணி முடிவடையும் தருவாயில்

இரணைமடு குளத்தில் வழமையாக 34 அடி நீர் சேமிக்கப்படும், ஆனால் இவ் வருடம் போதிய மழைவீழ்ச்சி கிடைக்கும் போது, 36 அடி வரை நீரை சேமிக்க முடியும் என, நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கிளிநொச்சியில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தின் பல குளங்களினதும் நீர் மட்டம் உயர்வடைய தொடங்கியுள்ளது.

அந்த வகையில் இரணைமடு குளம் 14.01 அடியாகவும், அக்கராயன்குளம் 09.00 அடியாகவும், கல்மடுகுளம் 10.03 அடியாகவும், கனகாம்பிகைகுளம் 07.00 அடியாகவும், வன்னேரிக்குளம் 04.03 அடியாகவும், புதுமுறிப்புக்குளம் 09.06 அடியாகவும், பிரமந்தனாறுகுளம் 07.06 அடியாகவும், குடமுருட்டிகுளம் 04.0 அடியாகவும் காணப்படுகிறது.

தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் நாளுக்கு நாள் குளங்களின் நீர் மட்டம் உயர்வடைந்து வரும் எனவும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com