இரட்டைக் கொலை சம்பவத்துக்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கோடரி மீட்பு

0
110

இரட்டைக் கொலை சம்பவத்துக்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கோடரி மீட்பு.

இரட்டைக் கொலை

மட்டக்களப்பு சவுக்கடி இரட்டைக் கொலை சம்பவத்துக்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கோடரி ஒன்றினை மீட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட குற்றத் தடவியல் பொலிஸ் பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுக்கள், மோப்ப நாய்கள் கசிதம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இரட்டைக் கொலை

இதன்போது கொலை நடைபெற்ற வீட்டுக்கு சுமார் 150 மீற்றர் தொலைவில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து உடைந்த நிலையில் கோடாரி ஒன்றிணையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த இரட்டைக்கொலை தொடர்பில் தொடர்ச்சியான விசாரணைகள் பல்வேறு கோணங்களில் நடைபெற்றுவருகிறது.

சவுக்கடி முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த மதுவந்தி பீதாம்பரம் (வயது 26) மற்றும் அவரது மகனான பீதாம்பரம் மதுஷ‪ன் (வயது 11) ஆகியோர் செவ்வாய்கிழமை (17) இரவு கொடூரமான முறையில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement