இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக நான்கு பேர் சந்தேகத்தின் பேரில் கைது

0
41

இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக நான்கு பேர் சந்தேகத்தின் பேரில் கைது.

இரட்டைக் கொலை சம்பவம்

மட்டக்களப்பு சவுக்கடியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக நான்கு பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை இடம்பெற்ற பகுதியில் நடைபெற்ற தீவிர விசாரணைகளின் பின் மோப்ப நாய்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது இருவரை அடையாளம் காணப்பட்டதையடுத்து இவர்கள் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படுள்ளார்கள்.

சவுக்கடி முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த மதுவந்தி பீதாம்பரம் (வயது 26) மற்றும் அவரது மகனான பீதாம்பரம் மதுஷ‪ன் (வயது 11) ஆகியோர் திங்கட்கிழமை (17) இரவு கொடூரமான முறையில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement