இயக்குனர் ஷங்கருடன் இணைய விரும்பாத ஹிந்தி ஹீரோக்கள்

0
167

இயக்குனர் ஷங்கருடன் இணைய விரும்பாத ஹிந்தி ஹீரோக்கள்

பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் நடிப்பதற்கு தமிழ் சினிமா நடிகர்கள் நீ நான் என போட்டி போடுகிறார்கள்.

shankar

ஆனால் பாலிவுட் ஹீரோக்களை வைத்து சங்கர் படம் இயக்க எண்ணும் நேரங்களில்  அவர்கள் கால்ஷீட் தர மறுக்கின்றனர்.

கடந்த 6 வருடங்களுக்கு முன் இந்தியில் ‘ரோபோ’ படத்தை இயக்க எண்ணிய ஷங்கர் பாலிவுட்டில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ஷாருக்கானிடம் கதை சொன்னார்.

shankar

முதலில் நடிக்க ஒப்புக்கொண்ட ஷாருக் பின்னர் ஷங்கருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.

இருப்பினும் ஷாருக்கான் அதேபாணியில் அனுபவ் சின்ஹா இயக்கியா ‘ரா ஒன்’ என்ற இந்தி படத்தில் சூப்பர் மேனாக அதே ஆண்டில் நடித்தார்.

shankar

தற்போது ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கும் ‘2.0’ படத்தில் அமீர்கான் நடிக்க மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அமீர்கான் கூறும்போது, ‘2.0 படத்தில் நடிக்க என்னிடம் கதை சொன்னார் ஷங்கர்.

shankar

ஒவ்வொரு காட்சியை அவர் என்னிடம் விளக்கியபோது என் கண்முன்னே ரஜினி சார்தான் வந்து சென்றார். இது அவர் நடிக்க வேண்டிய படம் என்று எனக்குள் தோன்றியது. அதனால் என்னால் அந்த கதையில் உணர்வுபூர்வமாக இணைய முடியவில்லை. அதனால் அந்த பட வாய்ப்பை ஏற்க நான் மறுத்துவிட்டேன். இந்த கதையை என்னிடம் ரஜினி சாரும் கூறினார். இதுவொரு வெற்றிபடமாக இருக்கும் என்பதை தெரிந்துகொண்டேன்’ என்றார்.

2.0 படத்தில் அமீர்கான் நடிக்க மறுத்த கதாபாத்திரத்தில் தற்போது அக்‌ஷய்குமார் நடித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement