இன, மத அடிப்படையில் நீதி வேறுப்பட முடியாது

0
25

இன, மத அடிப்படையில் நீதி வேறுப்பட முடியாது. இனவாதச் சம்பங்களை வன்மையாக கண்டிப்பதாக அமைச்சர் கயந்த கருணாத்திலக்க தெரிவித்தார்.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

நாட்டில் அண்மைய சில நாட்களாக இனவாதம் மற்றும் வேறுவகையில் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்தச் சம்பவங்களை அரசு வண்மையாக கண்டிப்பதுடன், இன, மத அடிப்படையில் சட்டம் ஒழுங்கை மேற்கொள்ள நாங்கள் ஒருபோதும் அனுமதியளிக்க மாட்டோம்.

இந்தச் சம்பவங்களுக்கும் அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இதனை அரசு வன்மையாக கண்டிக்கிறது.

சம்பங்கள் இடம்பெற்ற பிரதேசங்களில் பொலிஸார் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும். சட்டத்தை மீற எந்தவொரு நபருக்கும் உரிமை இல்லை. நாட்டின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டே அனைவரும் செயற்பட வேண்டும் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com