இன ஒற்றுமையைப் பலப்படுத்த வழிவகுக்கும் புதிய அரசமைப்பு!

0
23

புதிய அரசமைப்பு இன ஒற்றுமையைப் பலப்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்று அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

“பௌத்த மதத்துக்கு இருக்கின்ற முதன்மை இடம் புதிய அரசமைப்பின் ஊடாக நீக்கப்பட வேண்டும் என்று தமிழர்களோ முஸ்லிம்களோ அரசிடம் கூறவில்லை. எல்லா மதங்களுக்கும் அந்தந்த இடத்தை வழங்கிவிட வேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

“இப்போது எம் எல்லோருக்கும் தேவையாக இருப்பது இனங்களிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதுதான். இந்த நாடு வெற்றியை நோக்கி நகர வேண்டுமென்றால் அனைத்து இனங்களும் இலங்கையர் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உள்ளோம்.

புதிய அரசமைப்பு இன ஒற்றுமையைப் பலப்படுத்துவதற்கு வழிவகுக்கும். அந்த அரசமைப்பின் ஊடாக பௌத்த மதத்துக்கு இருக்கின்ற முதன்மை இடம் நீக்கப்படும் என்று தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் எதுவித உண்மையும் இல்லை. அவ்வாறு நீக்கப்பட வேண்டுமென்று யாரும் கோரிக்கை விடுக்கவும் இல்லை.

பௌத்த மதத்துக்கு இருக்கின்ற முதன்மை இடம் புதிய அரசமைப்பின் ஊடாக நீக்கப்பட வேண்டும் என்று தமிழர்களோ முஸ்லிம்களோ அரசிடம் கூறவில்லை. எல்லா மதங்களுக்கும் அந்தந்த இடத்தை வழங்கிவிட வேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர்” – என்று தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com