இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்

0
46

இன்று நாட்டின் சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெற்றக் கூடும் என, எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இன்று இடியுடன் கூடிய

வடமேல் மாகாணத்தில் அடிக்கடி மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது என, வானிலை அவதான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, பதுளை, திருகோணமலை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் அவிசாவளை பகுதியிலும் அடிக்கடை மழை பெய்யக் கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com