இன்றும் நாளையும் வாக்களிக்கலாம்

0
15
வாக்களிக்கலாம்

உள்ளுராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் இதுவரை வாக்களிக்காதவர்கள், இன்றும் நாளையும் வாக்களிக்க வாயப்பு வழங்கப்பட்டள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு, அண்மையில் இரண்டு கட்டங்களாக இடம்பெற்றன.

கடந்த 22ஆம் திகதி தேர்தல் அலுவலகங்கள், மாவட்ட செயலக அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் தபால் மூல வாக்குப் பதிவுகளுக்கு முதற்கட்ட அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இரண்டாம் கட்டத்தின் கீழ், 25 மற்றும் 26ஆம் திகதிகளில் ஏனைய அரச அலுவலகங்களில் தபால் முல வாக்களிப்புக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

குறித்த தினங்களில் வாக்களிக்காதவர்கள் இன்று மற்றும் நாளைய தினம் வாக்குகளை பதிவு செய்யமுடியும் என, பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com