இன்புளுவென்ஸா எச்1 என்1 வைரஸ்கள் நாட்டில் வேகமாக பரவி வருகிறது : அரசாங்கம் அலர்சிய போக்கில்

0
66

இன்புளுவென்ஸா எச்1 என்1 வைரஸ்கள் நாட்டில் வேகமாக பரவி வருவதாக அரச தாதி வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இன்புளுவென்ஸா எச்1 என்1 வைரஸ்களுக்கு நாட்டில் மருந்து வகைகள் குறைவாக உள்ள சூழலில் இந்த வைரஸ் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அரச தாதி வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

அரச தாதி வைத்திய சங்கத்தின் தலைவர் காமினி குமாரசிங்க இது குறித்து மேலும் வலியுறுத்தியுள்ளதாவது ,

தொற்றுக்கான மருந்து வகைகளின் தட்டுப்பாட்டை விரைவில் நிவர்த்தி செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எச்1 என்1 தொற்று வேகமாக பரவிவருவதோடு, அதனால் பீடிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர்.

இந்த தொற்றைக் கட்டுப்படுத்தும் டெமிப்ளு என்ற மருந்து வகைக்கு தற்போது தட்டுப்பாடு நிலவுகிறது.

சுமார் நூற்றுக்கு 15 சதவீதத்தில் மருந்துக்கான கேள்வி அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு இதனைக் கருத்திற்கொண்டு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement