9 விக்கட்டுகளால் இந்திய அணி வெற்றி

0
45

சுற்றுலா இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் இன்று தம்புள்ள- ரன்கிரி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கட்டுகளால் வெற்றிப்பெற்றுள்ளது.

நாணயச்சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இந்திய அணி

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய 43 ஓவர்களில் இலங்கை அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 216 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 28.5 ஓவரில் 1 விக்கட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை இலகுவாக அடைந்தது.

இந்திய அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சிகர் தவான் ஆட்டமிழக்காது 132 ஓட்டங்களையும், அணித்தலைவர் விராட் கோஹ்லி ஆட்டமிழக்காது 82 ஓட்டங்களை பெற்று  இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments