இந்தியாவுடன் உடன்படிக்கை செய்துகொள்ள சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் : எதரணியின் ஆலோசனை

0
28

இந்தியாவுடன் இலங்கை அரசு எதிர்காலத்தில் செய்துகொள்ளவுள்ள உடன்படிக்கைகள் குறித்து நாட்டில் பொது வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும் என்று கூட்டு எதிரணி வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவுடன்
உதய கம்மன்பில

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியாதாவது,

இலங்கை அரசு தான்தோன்றித்தமான விதத்தில் மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காது இந்தியாவுடன் உடன்படிக்கைகளை செய்துகொள்ள தயாராகி வருகிறது. எட்கா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டால் இங்கு பாரிய பொருளாதார சுரண்டல்கள் இடம்பெறும். வேலையிண்மை பிரச்சினை எனப் பல்வேறு பிரச்சினைகள் தோற்றம் பெரும்.

இந்த அரசு தேசிய சொத்துகளை சர்வதேசத்திற்கு தாரை வார்க்கும் செயற்பாட்டையே தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இதற்கு அனுமதியளிக்க முடியாது. இந்தியாவுடன் மக்களின் கருத்துகளுக்கு விரோதமாக எதிர்காலத்தில் செய்துகொள்ளவுள்ள அனைத்து உடன்படிக்கைகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தி சர்வஜன வாக்கெடுப்பொன்று நடத்தப்பட்டு மக்களின் அங்கீகாரத்தை அரசு பெற்றால் மாத்திரமே கைச்சாத்திட வேண்டும் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments