இந்தியாவில் கைது செய்யப்பட்ட 10 இலங்கை மீனவர்கள் புழல் சிறையில்

0
432

இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 10 மீனவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


தமிழ்நாட்டில் நாகை அருகே ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர பாதுகாப்பு பிரிவினர் இந்த 10 மீனவர்களையும் நேற்று அதிகாலை கைதுசெய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களுள் சிங்கள மற்றும் தமிழ் மீனவர்கள் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுன்றது. இவர்கள் தமிழ்நாட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டபின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து இவர்களை எதிர்வரும் 23ம் திகதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதவானினால் உத்தரவிடப்பட்டது.

நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்பட்ட மீனவர்களிடர் நீதவான் பொலிஸார் உங்களை துன்புறுத்தினார்களா என்று கேட்டுள்ளார். தமிழக பொலிஸார் தம்மை கண்ணியமாக நடத்தியதாக இலங்கை மீனவர்கள் கூறியதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்று இவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டபோது நீதிமன்ற வளாகத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.