இந்தியாவிற்கு எதிரான 20க்கு 20 கிரிக்கெட் தொடரில் இருந்து அவுஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் விலகல்

0
78
இந்தியாவிற்கு எதிரான இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடருக்கு தயாராகும் வகையில் இந்தியாவிற்கு எதிரான 20க்கு 20 கிரிக்கெட் தொடரில் இருந்து அவுஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் விலக உள்ளார்.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் இடம்பிடித்துள்ளார்.
இந்த நிலையில், இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்த பின்னர், ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரில் பங்குபெற உள்ளது.
இதனால் இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலக பேட் கம்மின்ஸ் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேட் கம்மின்ஸ்க்குப் பதிலாக மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட 20க்கு 20 தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 7 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Advertisement