இந்தியப் படகுகளை நிபந்தனையின் கீழ் விடுவிக்க தீர்மானம்

0
11
Want create site? Find Free WordPress Themes and plugins.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீன்பிடி படகுகளை நிபந்தனைகளின் விடுவிக்க கடற்றொழில் அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலரந்துரையாடலில் கலந்துக்கொண்டப் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்து-இலங்கை கடல் பிரச்சினை தொடரபாக கடந்த வருடத்திலிருந்து தற்போது வரை முன்னெடுக்கப்பட்டு வந்த கலந்துரையாடல்களின் பிரதிபலனாக இலங்கை அரசினால் எடுக்கபட்ட தீர்மானத்திற்கு அமைய முதலாவதாக 2015ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட 42 மீன்பிடி படகுகளையும் விடுவிப்பதற்கு தீர்மானிக்கபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றை பொறுப்பேற்குமாறு இந்திய அரசிற்கு அறிவித்துள்ளதாகவும்,குறித்த படகுகள் மீண்டும் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையாதவறான நிபந்தனையின் அடிப்படையிலேயே விடுவிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments