இந்தியத் தூதுவருடன் இ.தொ.கா. பிரதிநிதிகள் விரைவில் சந்திப்பு

0
23

இந்தியத் தூதுவருடன் இ.தொ.கா. பிரதிநிதிகள் இவ்வாரம் சந்திப்பொன்றை இவ்வாரம் மேற் கொள்ளவுள்ளனர்.

இவ்விரு தரப்பினருக்குமிடையில் நேற்றைய தினம் சந்திப்பு நடத்துவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தபோதிலும், இந்தியத் தூதுவர் அவசரமாக டில்லி சென்றுவிட்டதால் சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.

இந்தியத் தூதுவருடன் இ.தொ.கா.

இவ்வாரத்துக்குள் சந்திப்பு இடம்பெறலாம் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அடுத்தமாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இவ்விஜயத்தின்போது அவர் ஹட்டனுக்கும் செல்லவுள்ளார். வைத்தியசாலை திறப்புவிழா, மக்கள் சந்திப்பு ஆகியவற்றிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.

இவை உள்ளிட்ட மேலும் பல விடயங்களை சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காகவே இ.தொ.கா தரப்பு கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் டரன்ஜித் சிங்கை சந்திக்கவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement