இதுவரை பார்க்காத அஜித்தை விவேகத்தில் பார்க்கலாம்

0
177

தல அஜித் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் விவேகம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

குறித்த திரைப்படத்தின் பாதி வேலைகள் நிறைவடைந்து உள்ள நிலையில், இன்னு சில நாட்களில் மிகப்பிரமாண்டமாக ட்ரெய்லர் வெளிவரவுள்ளதாக இயக்குனர் சிவா தெரிவித்துள்ளார்.

இவர் அண்மையில் வழங்கிய செவ்வி ஒன்றின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், ட்ரெய்லரில் ஆரம்பமே அமர்க்களமாக இருக்கும் எனவும் ஓப்பனிங் டயலொக் மிக மாஸாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். வெகுவிரைவில் அனைவரும் எதிர்பார்க்கும் அளவுக்கு ட்ரெய்லர் வெளிவரும்.

முந்தைய படங்களை விட விவேகம் படத்துக்கு நிறைய வித்தியாசத்தை காட்டியுள்ளேன். அதனால் இந்த படத்தில் இதுவரை காணாத அஜித்தை ரசிகர்கள் காணலாம்.

மேலும், இந்த படத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் சண்டை காட்சிகளும் மிகவும் பிரமாண்டமாகவும் ரசிக்கத்தக்க வகையிலும் இருக்கும்.

வேதாளம் வீரம் ஆகிய படங்கள் மாபெரும் வெற்றியை தந்தது. அந்த வரிசையில், விவேகமும் அமையும்.

ஹொலிவூட் அளவிற்கு ஒரு படம் எடுக்கவேண்டும் என எல நாள் கனவு. அந்த கனவு விவேகம் மூலம் நிறைவேறியுள்ளது எனவே கூறவேண்டும்.

மேலும், ஒரு சிறிய வேளையாக இருந்தாலும் என்னுடன் பணிபுரியும் அனைவருடனும் கலந்தாலோசித்தே செய்வேன்.

அஜித்தை பொருத்தவரை அவர் எப்படி பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் விவேகம் படத்திற்காக நான் அவரை அதிகமாகவே துன்புறுத்திவிட்டடேன் என்றே தோன்றுகின்றது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

Advertisement