இண்டாவது டெஸ்டில் களமிறங்கும் சந்திமல்

0
40

இந்தியாவிற்கு எதிராக காலி டெஸ்ட்டில் இடம்பெறாத இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமல் கொழும்பில் நடைபெறும் 2-ஆவது டெஸ்டில் விளையாடுகிறார்.

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. காலியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 304 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த டெஸ்டிற்காக இலங்கை அணி தயாராகிக் கொண்டிருக்கும்போது, சந்திமல் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால் ஒரு வாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் வலியுறுத்தினார்கள். இதனால் முதல் டெஸ்ட்டில் சந்திமல் பங்கேற்கவில்லை.

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி 3-ஆம் திகதி கொழும்பில் தொடங்குகிறது. இந்த போட்டியில் சந்திமல் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் முன்னணி பேட்ஸ்மேன் குணரத்னே இடது கை பெருவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார்.

சுழற்பந்து வீச்சாளர் ஹெராத்தின் இடது கை விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் 2-வது டெஸ்ட்டில் பங்கேற்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. போட்டி தொடங்குவதற்கு முன்புதான் ஹெராத் நிலவரம் குறித்து தெரியவரும் என்று இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளாது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement