இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்த பாகிஸ்தான் அணி

0
14

இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்த பாகிஸ்தான் அணி. ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண தொடரின் அரையிறுதி போட்டியில், இங்கிலாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

நேற்று கார்டிப் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்களின் கடும் நெருக்கடிக்கு இலக்காகி 49.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 211 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக ஜே ரூட் 46 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் ஹசான் அலி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

212 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 37.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதல் அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

அணியின் அதிகபட்ச ஓட்டமாக அசார் அலி 76 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். போட்டியில் ஹசான் அலி போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments