இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் நான்காவது ஒருநாள் போட்டி நாளை

0
11

இங்கிலாந்துஇங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி நாளை லண்டனில் இடம்பெறவுள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் நடைபெற்று முடிந்துள்ள மூன்று போட்டிகளில் 2க்கு 0 என்ற அடிப்படையில் இங்கிலாந்துஅணி முன்னிலை பெற்றுள்ளது.

ஒரு போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

இந்த நிலையில், நாளை இடம்பெறவுள்ள நான்காவது போட்டியில் வெற்றிபெற்றால் இங்கிலாந்துஅணி தொடரை கைப்பற்றிவிடும்.

எனவே, தொடரைக் கைப்பற்றும் முயற்சியுடன் நாளை போட்டியில் இங்கிலாந்து அணி களமிறங்க உள்ளது.

மறுபுறத்தில் நாளைய போட்டி மற்றும் இறுதிப் போட்டி என்பனவற்றில்  மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றால் தொடர் சமநிலையில் முடிவடையும்.

எனவே, தொடரை இழைப்பதை தவிர்க்கவும் தொடரை சமநிலைப்படுத்தும் முயற்சியிலும் மேற்கிந்திய தீவுகள் அணி, நாளை மற்றும் இறுதிப் போட்டிகளில் வியூகம் வகுத்து களமிறங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments