ஆவா குழு உறுப்பினர்கள் ஐவர் சாவகச்சேரியில் கைது

0
43

ஆவா குழு உறுப்பினர்கள் ஐந்து பேரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆவா குழு உறுப்பினர்கள்

கடந்த காலங்களில் பரபரபாக்க காணப்பட்ட சாவகச்சேரி அல்லாரை, மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களில் ஆவா குழுவே ஈடுபட்டதாக யாழ். பொலிஸார் கூறியிருந்தனர்.

ஆவா குழுக்களை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ யுத்தக்காலத்தில் இயக்கியிருந்ததாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தன. என்றாலும், அந்தக் குற்றச்சாட்டை அவர் முற்றாக நிராகரித்திருந்தார்.

அதேவேளை, யுத்தத்தின் போது இல்லாத ஆவா குழுக்களை நல்லாட்சி அரசு இயக்கி வடக்கில் இராணுவத்தை நிலைக்கொள்ள நடவடிக்கை எடுத்ததாக வடக்கின் அரசியல் தலைமைகள் போர்க்கொடி உயர்த்தியிருந்தனர்.

ஆவா குழு உறுப்பினர்கள்

இந்நிலையிலேயே தற்போது ஆவாக்குழுவில் அங்கத்துவர்கள் என்ற அடிப்படையில் ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 19 வயதிற்கும் 21 வயதிற்கும் உட்பட்டவர்கள். இவர்கள் சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com