ஆவா குழுவினரின் செயற்பாடு முடக்கம்

0
39

ஆவா குழுவினரின் செயற்பாடு முடக்கம். வடக்கில் கடந்த பல மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த அனைத்து தாக்குதல் சம்பவங்களும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு,’ஆவா’குழுவினர் அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஆவா குழுவினரின்

பதுளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கு சம்பவங்கள் தொடர்பில் சில தவறான அபிப்ராயங்கள் வெளிப்படுத்தப்பட்டதாகவும், இறுதியில் பொலிஸ்மா அதிபர் என்ற ரீதியில் அங்கு சென்று பொதுமக்களுடன் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டதுடன், உடன் அமுலுக்கு வரும் வரையில் சில வேலைத்திட்டங்களை வடக்கில் முன்னெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நினைத்ததைப் போலவே தமது வேலைத்திட்டம் வெற்றிபெற்றுள்ளதாகவும், 2 வாரத்திற்குள் அனைவரையும் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement