ஆவா குழுத் தலைவர் நிசா விக்டருக்கு கடூழிய சிறைத்தண்டனை!

0
304

ஆவா குழுத் தலைவர் நிசா விக்டருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் கடூழிய சிறைத் தண்டனை!

ஆவா குழுத் தலைவர்

ஆவா குழுவின் தலைவர் என்று கூறப்படும் நிசா விக்டருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் ஒன்றரை ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்துள்ளது. சிறைக்காவலர்களின் பிடியில் இருந்து தப்பிச் சென்ற குற்றம் தொடர்பான வழக்கிலேயே அவருக்கு இன்று இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மானிப்பாயில் நடந்த வாள்வெட்டுச் சம்பவம் ஒன்றில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகத்துக்குரியவரான நிசா விக்டர், கடந்த வெள்ளிக்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதன்போது அங்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடமிருந்து அவர் தப்பிச்சென்றார்.

பின்னர் அந்தப் பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் நிசா விக்டர் மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், இன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே, அவருக்கு ஒன்றரை ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com