தேர்தல் அறிவிப்பு ஒக்டோம்பர் 23இல் வெளியாகும்

0
18

செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் ஆயுட்காலம் முடிவடையும் மாகாண சபைகளுக்கானத் தேர்தலை நடத்துவது குறித்த அறிவிப்பை, ஒக்டோபர் 2 ஆம் திகதி வெளியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணையகத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உள்ளுராட்சித் தேர்தல்கள் தொடர்பான பிரச்சினை தற்போது முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளது. எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

இதில் சில தொழில்நுட்பப் பிரச்சினைகள் காணப்படுவதாக சில கட்சிகளினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவற்றில் திருத்தங்களை மேற்கொண்டு மேற்படி சட்டமூலமானது நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே எம்மால் தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்க முடியும். இதனை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு நாடாளுமன்றத்திற்கே உள்ளது.

நாடாளுமன்றத்தில் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்படாமல் எம்மால் தேர்தலை நடத்தவே முடியாது. சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு 75 நாட்களுக்குள் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த ஆணையகம் தயாராக உள்ளது.

தேர்தல் அறிவிப்பு

இதேவேளை, செப்டம்பர் மற்றும் ஒக்டோபரில் ஆயுட்காலம் முடிவடையும் மாகாண சபைகளுக்கானத் தேர்தலுக்கான அறிவிப்பை அடுத்த ஒக்டோபர் 2 ஆம் திகதி வெளியிடவும் எதிர்ப்பார்த்துள்ளோம். அதற்கு முன்னர் தேர்தலை நடத்துவதென்றால் நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments