ஆனமடுவ பிரதேசத்தில் புதையல் தேடிய 06 பேர் கைது

0
32

ஆனமடுவ புளியங்குளம் பிரதேசத்தில் குளத்தின் மேல் பகுதிக்கு புதையல் ஒன்றை எடுப்பதற்கு முயற்சித்ததாக கூறி சந்தேகத்தில் 06 பேர் ஆனமடுவஆனமடுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களுள் அசை நிறுவன அபிவிருத்தி அமைச்சின் சாரதி ஒருவரும் உள்ளடங்குவதுடன், அவர் ஆனமடுவ, தம்மென்னாகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
புதையலை வௌியே எடுக்க முயற்சித்த இடத்திற்கு அருகில் இருந்து இரண்டு லொறிகளும் பெகோ இயந்திரம் ஒன்றும் பொலிஸரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் பொருட்களும் ஆனமடுவ மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments