நியூஸி தெ.ஆப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட்: மழை காரணமாக பாதிப்பு

0
92

தென்னாபிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று நியூஸிலாந்தின் ஹமில்டனில் அமைந்துள்ள செடன் பார்க் மைதானத்தில் ஆரம்பமானது.

முதல் ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டது. நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தது. இதன்படி மழையின் இடையிடையே ஆடிய தென்னாபிரிக்க அணி இன்றைய ஆட்டநேர முடிவின் போது 4 விக்கெட்டுகளை இழந்து 123 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் தென் ஆபிரிக்க அணியின் சார்பில் அம்லா 50 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்துள்ளார். பிளஸிஸ் மற்றும் பவுமா ஆகியோர் ஆட்டமிழக்காமல் களத்திலுள்ளனர்.

இவ்விரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்று முடிந்த முதலிரு டெஸ்ட் போட்டி முடிவுகளின் பிரகாரம், 10 என்ற ரீதியில் தென் ஆபிரிக்கா முன்னிலை பெற்றுள்ளது.

இன்று ஆரம்பமாகியுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில், தென் ஆபிரிக்கா வெற்றிபெற்று தர்மசாலாவில் நடைபெறும் இந்தியா மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் ஆஸ்ரேலிய அணி தோல்வியடையும் பட்சத்தில் தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு தென் ஆபிரிக்க அணிக்கு கிடைக்கும்.

அதேவேளை, தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் நிலைத்திருப்பதற்கு நியூஸிலாந்து வெற்றிபெறவேண்டிய கட்டாயம் உள்ளது. தோல்வியடையும் பட்சத்தில் ஆறாவது இடத்திற்கு பின்தள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டது

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments