ஆசிரியரை இடமாற்றம் செய்ய வேண்டாம் பம்பரக்கலையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

0
48

லிந்துலை பம்பரக்கலை விவேகலையா பாடசாலை தமிழ் பாட ஆசிரியரை இடமாற்றம் செய்ய வேண்டாமென்று கோரி பெற்றோர் மற்றும் மாணவர்களால் ஆர்ப்பாட்டமொன்று இன்று மேற்கொள்ளப்பட்டது.

ஆசிரியரை இடமாற்றம்

லிந்துலை பம்பரக்கலை விவேகலையா பாடசாலையின் தரம் 1 முதல் 11 வரை கல்வி பயிலும் மாணவ, மாணவிகளும், மாணவர்களின் பெற்றோர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

போராடுவோம் போராடுவோம் எங்கள் ஆசிரியர் எங்களது பாடசாலையிலேயே இருக்க அனுமதி கொடுக்கும் வரை போராடுவோம், 7 வருடங்களாக எங்களுக்கு கற்பித்த ஆசிரியரை வெளிப்பாடசாலைக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம், தரம் 11 வகுப்பாசிரியரை வேறொரு பாடசாலைக்கு இடமாற்றம் செய்தால் பெற்றோர்களாகிய எங்களது நடவடிக்கை கடுமையானது என எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

ஆசிரியரை இடமாற்றம்

மேற்படி ஆசிரியரை இடமாற்றம் செய்வதை ரத்துசெய்ய வேண்டும் எனவும் இதற்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments