அஸ்கிரிய பீடத்தின் கருத்தை மீறி தேச துரோகிகளாக வேண்டாம் : மெகொட அபேதிஸ்ஸ தேரர்

0
49

நாட்டை இரண்டாக பிளவுப்படுத்துவம் அரசமைப்பை உருவாக்கும் பாதையில் சொன்றுக்கொண்டிருக்கும் அரசு பௌத்த பிக்குக்களில் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் எந்தவொரு அரசியல் வாதிக்கும் அரசமைப்பை மாற்றியமைக்க சந்தர்ப்பமளிக்க மாட்டோம் என்று மெகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் வலியுறுத்தியதாவது,

கடந்த வாரம் புதிய அரசமைப்பொன்றை கொண்டுவரும் செயற்பாட்டை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அஸ்கிரிய பீடம் அறிவித்திருந்தது. இவர்களின் கருத்து நிராகரிக்கப்பட்டமையானது அவர்களுக்காக அகௌரவம் அல்ல இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த பௌத்தர்களுக்கும் இழக்கப்பட்ட சவாலாகும்.

13ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் செயற்பட்டு நாட்டை பிளவுப்படுத்தும் நோக்கில் செயற்படும் எந்தவொரு அரசுக்கும் அதிகாரம் இல்லை. அவ்வாறு செய்ய முற்படுபவர்கள் தேச துரோகிகளே. எனவே, அஸ்கிரிய பீடித்தின் கோரிக்கை ஏற்று அரசு செயற்பட வேண்டும். மாறாக அவர்கள் மீது கை வைக்க எத்தனிக்கக் கூடாது என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com