அஷிஸ் நெஹ்ரா ஓய்வுபெறவுள்ளார்.

0
45
அஷிஸ் நெஹ்ராஇந்திய கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அஷிஸ் நெஹ்ரா சர்வதேச போட்டிகளில் இருந்து தமது ஓய்வுபெறவுள்ளார்.
38 வயதான அவர் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 20க்கு20 கிரிக்கட் தொடருக்காக இணைக்கப்பட்டிருந்தார்.
எனினும் அவர் நடைபெற்று முடிந்த 2 20க்கு20 போட்டிகளிலும் விளையாடுவதற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.
இந்தநிலையில் நியுசிலாந்துக்கு எதிராக அடுத்தமாதம் நடைபெறவுள்ள கிரிக்கட் தொடருடன் நெஹ்ரா ஓய்வுபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் மாத்திரம் இன்றி, இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் இருந்தும் விலகவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான காலம் என்று தாம் கருதுவதாக நெஹ்ரா இந்திய ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
Advertisement