அவுஸ்ரேலியாவை வென்று இந்தியா மீண்டும் முதலிடத்தில்

0
44

இந்தியா மீண்டும் முதலிடத்தில்

இந்தியா

சுற்றுலா அவுஸ்ரேலிய அணியுடனான ஐந்து போட்டிகளை கொண்ட தொடரை இந்திய அணி 4-1 என்ற ரீதியில் கைப்பற்றியுள்ளது.

நாக்பூரில் நேற்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 7 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்ரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 242 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்த இந்தியா அணி 42.5 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் 125 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்த ரோஹித் சர்மா ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

தொடரின் சிறப்பாட்டகாரராக ஹார்டிக் பாண்டியா தெரிவானார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சர்வதேச ஒருநாள் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பெற்றுள்ளது.

அதன்படி, இந்திய அணி 120 புள்ளிடகளுடன் முதலிடத்திலும் தென்னாபிரிக்க அணி 119 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் அவுஸ்ரேலிய அணி 114 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் காணப்படுகின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments