அரிசி இறக்குமதிக்கு எதிராக விவசாயிகள் போர்க்கொடி!

0
37

அடுத்த வருட ஆரம்பம் வரை உள்நாட்டுத் தேவைக்கான போதியளவு அரிசி கையிருப்பில் உள்ளது எனவும், அதனால் அரிசியை இறக்குமதி செய்யவேண்டிய அவசியமே கிடையாது எனவும் அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இச்சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்தவை வருமாறு:-

“அநுராதபுரம், பொலநறுவை மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நெல் அறுவடைக்குத் தயாராகவுள்ளது. அத்துடன், கவுதுல பிரதேசத்தில் 18 ஆயிரம் ஏக்கரிலும் பொலநறுவையில் ஒன்றரை லட்சம் ஏக்கரிலும் அறுவடை நடக்கவுள்ளது. இந்த அறுவடைகள் முடிந்ததும் நாட்டில் கிட்டத்தட்ட 26 மில்லியன் மெட்ரிக் தொன் அரிசி கையிருப்பில் இருக்கும்.

இந்நிலையில், அரசு அரிசியை இறக்குமதி செய்தால் உள்நாட்டு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர். இந்தக் கையிருப்பின்படி ஒரு கிலோ அரிசியின் மொத்த விலையை 64 ரூபாவாகவும் சில்லறை விலையை 68 ரூபாவாகவும் நிர்வகிக்க முடியும். எனவே, இந்த நிலையில் அரிசியை இறக்குமதி செய்யவேண்டிய அவசியமே கிடையாது” – என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com