அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழே செயற்படுகிறது : லக்ஷ்மன் கிரியெல்ல குற்றச்சாட்டு

0
21

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படும் தொழிற்சங்கமாகும் என்று உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரித் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அரச வைத்திய
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாட்டில் பூதாகரமாக வெடித்துள்ள சைட்டம் பிரச்சினையை தீர்ப்பதற்கு மத்தியஸ்தம் பூண அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பின்னடைப்புச் செய்கிறது. அவர்களுக்கு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

மருத்துவக் கல்வித் தொடர்பில் அதிகாரம் எடுக்கும் உரிமம் பல்கலைக்கழத்திற்கும் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குமே உள்ளது. சைட்டம் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன், மீண்டும் பேச்சுகளை நடத்தி விரைவில் தீர்வொன்றை முன்வைப்போம் என்றும் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments