அரச வைத்தியர் சங்கம் மீண்டும் போராட்டம் : முடங்கியது வைத்திய சேவைகள்

0
27

சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை பொதுவுடமையாக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளது.

இன்று காலை 8 மணிமுதல் நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மாலபே தனியார் மருத்துக் கல்லூரியை அரசுடமையாக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர்ச்சியாக கடந்த மாதம் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்திருந்தது.

என்றாலும், இம்மாத ஆரம்பத்தில் மீண்டும் வைத்தியர் சங்கம் பணிப்பகிஷ்பரிப்பை மேற்கொள்வதாக அறிவித்த போது நாட்டில் டெங்கு நோய் தலைவிரித்தாடியதால் ஆண்டகை மெல்கம் ரஞ்ஜித் உள்ளிட்ட பலர் பணிப்பகிஷ்கரிப்பை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தற்கு அமைய போராட்டம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று மீண்டும் கொழும்பில் கூடிய வைத்தியர் சங்கத்தின் மத்திய குழுக் கூட்டத்தில் இன்றுகாலை 8 மணிமுதல் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பை நாடுதழுவிய ரீதியில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.

நெவில் பெர்ணாந்து வைத்தியசாலை அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன், சைட்டம் குறித்து அரசு இறுதி முடிவெடுக்க கலந்துரையாடி வருவதாக ஜனாதிபதி உள்ளிட்ட துறைசார் அமைச்சர்கள் கூறியுள்ள நிலையிலேயே வைத்தியர் சங்கம் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com