அரசியல் தொடர்பில் முடிவெடுக்கவில்லை – கோட்டாபய

0
17

அரசியலுக்கு வருவது தொடர்பாக தாம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சென்றிருந்த கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாடு திரும்பினார்.

உள்ளூராட்சித் தேர்தலில்ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுள்ள வெற்றி தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், “பொய்யான பரப்புரைகளால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மக்களால் தோற்கடிக்கப்பட்டிருந்தார்.

ஆனால் மக்கள் இப்போது உண்மையை உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். அரசியலுக்கு வருவது தொடர்பாக நான் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அமெரிக்க குடியுரிமையைக் கொண்டுள்ளதால், இலங்கையில் பிரதமர் போன்ற பதவிகளை என்னால் வகிக்க முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com