அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ் பல்கலைக்கழக அனைத்து நுழைவாயில்களும் கதவடைப்பு

0
22

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாகவவுனியா மேல் நீதிமன்றத்தில் இருந்து அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை வவுனியாவிலேயே விசாரணை செய்ய வேண்டும் எனக் கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முழுமையான கதவடைப்பு போராட்டத்தை இன்று ஆரம்பித்திருக்கின்றனர்.

இந்தப் போராட்டத்தினால், அனைத்து நுழைவாயில்களும் மூடப்பட்டு பல்கலைக்கழகம் முழுமையாக ஸ்தம்பித்துள்ளது.

தமது வழக்குகளை வவுனியா மேல் நீதிமன்றத்திலேயே விசாரணை செய்ய வேண்டும் எனக் கோரி முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களான இராசதுரை திருவருள், மதியழகன் சுலக்ஷன், கணேசன் தர்ஷன் ஆகிய மூவரும் கடந்த ஒரு மாத காலமாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com