அரசியலமைப்பு சீர்த்திருத்தம் மூலம் ஒருபோதும் நாடு பிளவுப்படாது – மகிந்த அமரவீர

0
16

எதிர்காலத்தில் கொண்டு வரப்படவுள்ள அரசியலமைப்பு சீர்த்திருத்தம் மூலம் ஒருபோதும் நாடு பிளவுப்படாது என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தங்காலை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அரசியலமைப்பின் மூலம் பௌத்த மதத்திற்கான உரிய இடம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பல குற்றச்சாட்டுக்கள் பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளன. தற்போது அவர்களுக்கு குற்றச்சாட்டுக்கள் இல்லை.

இதனால் அவர்கள் புதிய அரசியல்யாப்பை கையில் எடுத்துள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Comments

comments