அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள பற்று தற்போது வெளிப்பட்டுள்ளது

0
177

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கிராமத்தை மட்டுமல்ல நகரங்களையும் வெற்றி பெற்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“நல்லாட்சி அரசாங்கம் எம்மை பழிவாங்கினாலும் நாட்டு மக்கள் கைவிடவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள பற்று தற்போது வெளிப்பட்டுள்ளது. மக்களின் மனங்களை வென்றவர்கள் என்றும் மறையப்போவது கிடையாது” என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த வெற்றி பாரிய அபிவிருத்திக்கான ஒரு பாதையினை உருவாக்கி கொடுத்துள்ளது. இதனை பயன்படுத்தி எதிர்காலத்தில் நாட்டின் அபிவிருத்தி முன்னேற்றத்தினை ஏற்படுத்த பொதுமக்கள் தொடர்ந்தும் தமது ஆதரவினை வழங்க வேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com