அயர்லாந்தை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இலங்கிலாந்து

0
37

அயர்லாந்தை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இலங்கிலாந்து அணி.

அயர்லாந்துக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை 20 எனக் கைப்பற்றியுள்ளது.

இங்கிலாந்து அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது. ஏற்கனவே கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்நிலையில், 2ஆவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

நாணயசுழற்சியில் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி இங்கிலாந்தின் ஜேசன் ராய், ஹேல்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ராய் 20 ஓட்டங்களை எடுத்த நிலையிலும், ஹேல்ஸ் 32ஓட்டங்களை எடுத்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர்.

அதன்பின் வந்த ஜோ ரூட் 73 ஓட்டங்களையும், மோர்கன் 76 ஓட்டங்களையும், பேர்ஸ்டோவ் அவுட்டாகாமல் 72 ஓட்டங்களையும் சேர்க்க இங்கிலாந்து அணி 50 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 328 ஓட்டங்களைக் குவித்தது.

329 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட அயர்லாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர் ஸ்டிர்லிங் அதிரடியாக விளையாடி 42 பந்தில் 48 ஓட்டங்களை சேர்த்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ஜாய்ஸ் நிதானமாக விளையாடி 43 பந்தில் 16 ஓட்டங்களைச் சேர்த்தார். அடுத்து வந்த போர்ட்டர்பீல்டு 83 பந்தில் 82 ஓட்டங்களைச் சேர்த்தார். அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, அயர்லாந்து அணி 46.1 ஓவரில் 243 ஓட்டங்களை எடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் இங்கிலாந்து அணி 85 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 20 எனக் கைப்பற்றியது. ஜோ ரூட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com