அயர்லாந்து தொடரில் விளையாட கொல்கத்தா அணிக்கு விடை கொடுத்தார் ஷாகிப்

0
37

அயர்லாந்து தொடரில் விளையாட கொல்கத்தா அணிக்கு விடை கொடுத்தார் ஷாகிப் அல் ஹசன்.

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னோட்டமாக பங்காள தேஷ் அயர்லாந்துக்கு எதிராக விளையாட இருக்கிறது.

வங்காள தேச அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஷாகிப் அல் ஹசன். இவர் ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐ.பி.எல். தொடர் தொடங்கிய நேரத்தில் பங்காளதேஷ் அணி இலங்கைக்கு எதிராக ரி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதனால் ஐ.பி.எல். தொடக்கத்தில் அவர் கொல்கத்தா அணியில் கலந்துகொள்ளவில்லை.

பின்னர் அணியில் இணைந்தாலும் குஜராத் அணிக்கெதிராக மட்டுமே களம் இறங்கினார். இதில் அவுட்டாகாமல் 1 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். அத்துடன், பந்துவீச்சில் 31 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை. அதன்பின் தொடர்ந்து வெளியே இருந்து வந்தார்.

ஜூன் 1ஆம் திகதி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதற்கு தயாராகும் வகையில் பங்காளதேஷ் அணி அயர்லாந்துடன் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்காக ஷாகிப் அல் ஹசன் கொல்கத்தா அணியில் இருந்து வெளியேறியுள்ளார். 2014ஆம் ஆண்டு கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல ஷாகிப் முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com