அம்மாவின் காதலனால் மகளுக்கு நேர்ந்த கதி

0
783

தவறிய அழைப்பின் மூலம் அறிமுகமான காதலியைத் தேடிவந்த இராணுவ சிப்பாய் அக்காதலியின் 12 வயதான சிறுமியை வல்லுறவிற்கு உட்படுத்தி விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட போது ஊர் மக்கள் குறித்த இராணுவ சிப்பாயை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று கம்பளை பிரதேசத்தில இடம்பெற்றுள்ளது.

நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கம்பளை அபுகஸ் பிட்டிய பகுதியைச் சேர்ந்த விதவைப் பெண்ணான குறித்தப் பெண் சில காலங்களுக்கு முன்னர் தனது தொலைபேசிக்கு வந்த தவறிய அழைப்பின் மூலம் அறிமுகமான எம்பிலிபிட்டியைச் சேர்ந்த இராணுவத்தில் கடமையாற்றும் இளைஞன் ஒருவருடன் காதல் வயப்பட்டு சித்திரைப்புத்தாண்டு விடுமுறையின் போது தனது வீட்டுக்கு வந்து தங்கிவிட்டு போகுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கமைய சம்பவதினம் காதலியைத் தேடிவந்த குறித்த இராணுவ சிப்பாய் அன்றிரவு காதலியுடன் தங்கியுள்ளதோடு அதிகாலை காதலியின் மகளான 12 வயது சிறுமியை வல்லுறவிற்கு உட்படுத்தி விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட சமயம் ஊர்வர்களுக்கு விடயம் தெரிய வரவே அந்நபரை பிடித்து கம்பளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com