அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கும் ஒப்பந்தம் மீண்டும் அமைச்சரவைக்கு

0
169

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவது தொடர்பில் திருத்தப்பட்ட உடன்படிக்கை அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் மேர்ச்சன்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்க அரசு உடன்படிக்கையொன்றை மேற்கொண்டு குறித்த பணிகள் ஆரம்பிக்கப்படவிருந்த சூழலில் கூட்டு எதிரணி மற்றும் அப்பாந்தோட்டை மக்களின் எதிர்ப்பால் அந்நவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

குறித்த ஒப்பந்த்தில் குத்தகைக்கு விடும் காலம் 99 ஆண்டுகளாக காணப்பட்டது. இதற்கு சு.கவும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் குறித்த குத்தகை காலத்தை 50 தொடக்கம் 60 ஆண்டு வரை குறைக்கும் வகையிலும், குத்தகைக்காலம் முடிவடைந்த பின்னர் திரும்பக் கையளிக்கும் வகையிலும், குத்தகை உரிமையை, 80 20 என்ற விகிதத்தில் இருந்து, 60 40 எனக் குறைக்கும் வகையிலும் புதிய உடன்பாட்டில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சு.க அறிவித்திருந்தது.

தற்போது திருத்தப்பட்ட உடன்படிக்கை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக அறிய முடிகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement