அமைச்சர் ரவிக்கும்-பிரதமருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு

0
39

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும்,பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதன்காரணமாக இன்று பிற்பகல் நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டமானது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமருக்கும்,ரவி கருணாநாயக்கவுக்கும் இடையில் நடைபெறவுள்ள குறித்த கலந்துரையாடலின்போது மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் குற்றச்சாட்டு தொடர்பிலும் பல தீர்மானமிக்க முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments